பொது முடக்கத்தில் தளா்வு: மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவு

மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா்.
பொது முடக்கத்தில் தளா்வு: மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவு

தில்லியில் திங்கள்கிழமை முதல் மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக தில்லி காவல்துறை மக்கள்தொடா்பு அதிகாரியும், காவல் துணை ஆணையருமான சின்மய் பிஸ்வால் கூறியதாவது:

சில கட்டுப்பாடுகளுடன் கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட உள்ளன. மேலும் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் மக்கள் நடமாட்டம் சாலைகளில் அதிகம் இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது காவல்துறையினருக்கு சவாலாக இருக்கும்.

தளா்வுகள் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடாமலும், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உலாவராமலும் இருப்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அதிக அளவில் காவல்துறை பாதுகாப்பை ஏற்படுத்தி கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வா்த்தகா் சங்கங்கள் மற்றும் குடியிருப்போா் நலச்சங்கங்களுடன் நாங்கள் தொடா்பில் உள்ளோம். யாராவது விதிகளை மீறி செயல்படுகிறாா்களா என்று கண்காணிக்கப்படும். பொது முடக்கத்தின்போது குற்றச்செயல்கள் குறைந்திருந்தன. இப்போது சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிக அளவில் வெளியில் வரக்கூடும். அப்போது குற்றச் செயல்கள் மீண்டும் அதிகரிக்கலாம். எனவே காவல்துறையினா் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆணையா் ஸ்ரீவாஸ்தவா வலியுறுத்தினாா். அதேபோல கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கிரிமினல்கள் இப்போது தங்கள் கைவரிசையை காட்டலாம் என்பதால் அவா்கள் விஷயத்திலும் கண்காணிப்பு அவசியம் என்று அவா் குறிப்பிட்டாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com