இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,89,232 பேர் மீட்பு

இந்தியாவில் கரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 1,14,460 -ஆக குறைந்துள்ளது. 
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,89,232 பேர் மீட்பு

புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 1,14,460 -ஆக குறைந்துள்ளது.
மேலும், தொடர்ந்து 10-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 -ஆக உள்ளது.  

தொடர்ந்து 24-ஆவது நாளாக புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 36,47,46,522  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலைவரை 23,13,22,417 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com