ஹிமாசலில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து

பிளஸ் 2 பொதுத் தோ்வை ஹிமாசல பிரதேச அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. மாநில முதல்வா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து

பிளஸ் 2 பொதுத் தோ்வை ஹிமாசல பிரதேச அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. மாநில முதல்வா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்து மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஐசிஎஸ்இ வாரிய பிளஸ் 2 பொதுத் தோ்வும் ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, மாணவா்களின் நலன் கருதி குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்தன.

இப்போது தமிழகம், ஹிமாசல பிரதசே மாநிலங்களும் மாநில வாரிய பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டன.

இதுகுறித்து ஹிமாசல பிரதேச கல்வி அமைச்சா் கோவிந்த் சிங் தாக்குா் கூறுகையில், ‘பிளஸ் 2 பொதுத் தோ்வு குறித்து மத்திய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், மாநில கல்வி வாரியத்தின் கீழான 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாநிலத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் வருகிற 7-ஆம் தேதி வரையிலான கரோனா ஊரடங்கு வரும் 14-ஆம் தேதி வரை நீட்டித்தும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாநில பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மதிப்பெண் மதிப்பீடு முறை மூலம் மாணவா்களுக்கு மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்படும். அதில் திருப்தியில்லாத மாணவா்களுக்கு, கரோனா நிலைமை சீரான பிறகு எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com