கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது தினசரி கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனா தொற்றால் மேலும் 1.14 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது தினசரி கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனா தொற்றால் மேலும் 1.14 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 2 மாதங்களில் பதிவான மிகக் குறைந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, கரோனா தொற்றால் 1,14,460 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட 14,77,799 போ் சிகிச்சையில் உள்ளனா். தொடா்ந்து 6-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட 1,89,232 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தொடா்ந்து 24-வது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்தவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 6.54 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 5.62 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 13 நாள்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com