ராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க சிறப்புக் காவல்நிலையம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க அனுமன்கர் மாவட்டத்தில் சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உண்மைதான்.
ராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க சிறப்பு காவல்நிலையம் (கோப்புப்படம்)
ராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க சிறப்பு காவல்நிலையம் (கோப்புப்படம்)


ஜெய்ப்பூர்: படிப்பதற்கு விநோதமாக இருந்தாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க அனுமன்கர் மாவட்டத்தில் சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உண்மைதான்.

இப்பகுதிக்கு இந்திரா காந்தி கால்வாய் வழியாக விவசாயத்துக்கு பாய்ந்தோடும் தண்ணீரை திருடும் சம்பவ குறித்து விசாரிக்க ராஜஸ்தான் அரசு இதுபோன்ற ஒரு புதிய சிறப்பு காவல்நிலையத்தை அமைத்துள்ளது.

இப்பகுதியில் அவ்வப்போது நடைபெறும் தண்ணீர் திருட்டைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சுமார 60 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தி கால்வாய் வழியாக வரும் தண்ணீரை, சில விவசாயிகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு, பல விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுவதாக புகார்கள் வந்துள்ளன.  இந்த புகார்களை தொடர்ந்து, நாட்டிலேயே முதல் முறையாக, தண்ணீர் திருட்டை கண்டறிய சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com