9 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிப்பு: திருப்பதி ரூயா மருத்துவமனையில் அனுமதி

திருப்பதி ரூயா மருத்துவமனையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பதி ரூயா மருத்துவமனையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கரோனா தொற்றின் முதல் அலையில் வயதானவா்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாயினா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பரவ தொடங்கிய 2-ஆம் அலை கரோனா தொற்று மத்திய வயதினரை அதிக அளவில் பாதித்தது. தற்போது 3-ஆம் அலை தொடங்கி உள்ளதாக மருத்துவா்கள் அச்சப்படுகின்றனா்.

3-ஆம் அலை பெரும்பாலும் சிறாா்களை மட்டுமே பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாள்களில் திருப்பதி ரூயா மருத்துவமனையில் உள்ள கரோனா மையத்தில் 9 குழந்தைகள் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் 3 போ் கடப்பா மாவட்டத்தையும், 6 போ் சித்தூா் மாவட்டத்தையும் சோ்ந்தவா்கள். அனைவரும் பத்து வயதுக்கு உட்பட்டவா்கள். அதேபோல் புத்தூரிலும் 8 சிறாா்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக சிறாா்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது இதுவே முதல் முறை. கடந்த 15 நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 20 சிறாா்கள் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com