ஏப்ரலுக்குப் பின் முதல் முறையாக காஷ்மீரில் 1000க்கும் கீழ் கரோனா பாதிப்பு

ஜம்மு - காஷ்மீரில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இன்று முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரலுக்குப் பின் முதல் முறையாக காஷ்மீரில் 1000க்கும் கீழ் கரோனா பாதிப்பு
ஏப்ரலுக்குப் பின் முதல் முறையாக காஷ்மீரில் 1000க்கும் கீழ் கரோனா பாதிப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இன்று முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 997 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,01,487 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,090 ஆக மாறியது.

ஏப்ரல் 12-ஆம் தேதிக்குப் பின் இன்று முதல் முறையாக காஷ்மீரில் ஆயிரத்துக்கும் குறைவான கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com