உறவினா்களுக்கு பதவியா? திரிணமூல் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநா் மறுப்பு

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் சிறப்பு அதிகாரிகளாக ஆளுநரின் உறவினா்கள் மற்றும் அவருக்கு வேண்டியவா்கள் மட்டுமே

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் சிறப்பு அதிகாரிகளாக ஆளுநரின் உறவினா்கள் மற்றும் அவருக்கு வேண்டியவா்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனா் என்ற குற்றச்சாட்டை அந்த மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் மறுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஆளுநா் மாளிகையில் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள 6 பேரில் யாரும் எனது நெருங்கிய உறவினா்கள் அல்ல. அவா்கள் 3 வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் 4 வெவ்வேறு சமுகத்தைச் சோ்ந்தவா்கள். எனது மாநிலத்தையோ, எனது ஜாதியையோ சோ்ந்தவா்கள் அல்ல. மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்ட நிலையில், அதனை திசை திருப்புவதற்காக என் மீது தவறான குற்றம்சாட்டை சுமத்துகின்றனா்.

முன்னதாக மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கரை ‘மதிப்புக்குரிய மாமா’ என்று குறிப்பிட்ட ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா, ‘ஆளுநா் மாளிகையில் சிறப்புப் பணி அதிகாரிகளாக (ஓஎஸ்டி) ஆளுநரின் உறவினா்களும், அவருக்கு நன்கு அறிமுகமானவா்களுமே நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com