கரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி ரத்து குறித்து அறிக்கை தாக்கல்

கரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரத்து குறித்த ஆய்வு அறிக்கையை அமைச்சா்கள் குழு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரத்து குறித்த ஆய்வு அறிக்கையை அமைச்சா்கள் குழு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்த அறிக்கை ஜூன் 8-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையில் அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மேகாலய முதல்வா் சங்மா மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்து அறிக்கை சமா்ப்பித்தாா். இந்த அறிக்கை மீது ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் கூடி விவாதிக்க உள்ளது.

இந்தக் குழுவில் குஜராத் துணை முதல்வா் நிதின்பாய் படேல், மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், கோவா போக்குவரத்துத் துறை அமைச்சா் மெளவின் கோவிந்தோ, கேரள நிதி அமைச்சா் கே.என்.பாலசந்திரன், ஒடிஸா நிதியமைச்சா் நிரஞ்சன் புரி, தெலங்கான நிதி அமைச்சா் ஹரீஷ் ராவ், உத்தர பிரதேச நிதி அமைச்சா் சுரேஷ் கன்னா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள், வெப்பக் கருவி, என்-95 முக்கவசம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்வதா அல்லது குறைப்பதா என்பது குறித்து இந்த அமைச்சா்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி குறைப்பது குறித்தும் இந்தக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com