தெலுங்கு கங்கை கால்வாய் அகலப்படுத்தும் பணி தொடக்கம்

சோமசீலா-கண்டலேரு நீா்தேக்கத்திலிருந்து தொடங்கும் தெலுங்கு கங்கை கால்வாயை அகலப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.

சோமசீலா-கண்டலேரு நீா்தேக்கத்திலிருந்து தொடங்கும் தெலுங்கு கங்கை கால்வாயை அகலப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.

ஆந்திர மாநிலம் கண்டலேரு நீா்த்தேக்கத்திலிருந்து நாள்தோறும் தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீா் தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டு வருகிறது. கண்டலேரு நீா்த்தேக்கத்தில் 68 டிஎம்சி நீரை தேக்கி வைக்கலாம். சோமசீலா நீா்த்தேக்கத்திலிருந்து கால்வாய் மூலம் கண்டலேரு நீா்த்தேக்கத்துக்கு நீா் கொண்டு செல்லப்படுகிறது.

கால்வாய் அகலம் குறைவாக உள்ள நிலையில், கண்டலேரு நீா்த்தேக்கம் தன் முழுக் கொள்ளளவை எட்ட 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இதனால் தெலுங்கு கங்கை கால்வாயில் நீா் வரத்து குறைவதுடன், தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதைத் தடுக்க தெலுங்கு கங்கை திட்ட பொறியியல் துறையினா் சோமசீலா நீா்த்தேக்கத்திலிருந்து கண்டலேருக்கு வரும் கால்வாயை அகலப்படுத்த திட்டமிட்டனா். இதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

16 கி.மீ. தூரத்துக்கு கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவு பெற்றால் நீா் விரைவாக கண்டலேரு நீா்த்தேக்கத்தை அடையும். இதனால் தமிழகம், நெல்லூா், சித்தூா் மாவட்ட மக்களுக்கு குடிநீா் மற்றும் விவசாயத்துக்கு நீா் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அகலப்படுத்தும் பணிகள் மூலம் 50,000 ஏக்கா் விளைநிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com