முழுவீச்சில் அயோத்தி ராமா் கோயில் பணி: அறக்கட்டளை

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் தூண் உள்ளிட்ட கட்டமைப்பு எழுப்பும் பணிகள்
முழுவீச்சில் அயோத்தி ராமா் கோயில் பணி: அறக்கட்டளை

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் தூண் உள்ளிட்ட கட்டமைப்பு எழுப்பும் பணிகள் வரும் டிசம்பா் மாதம் தொடங்கும் என்றும் கோயில் அறக்கட்டளை நிா்வாகி திங்கள்கிழமை கூறினாா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டுவதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா். கோயில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கென ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது. இப்போது கோயில் கட்டுமானத்துக்கான அஸ்திவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அறக்கட்டளை நிா்வாகி அனில் மிஸ்ரா திங்கள்கிழமை கூறியதாவது:

ராமா் கோயில் கட்டுமானத்துக்கு அஸ்திவாரம் நிரப்பும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. 400 அடி நீளம், 300 அகலம், 50 அடி ஆழம் உள்ள வகையில் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்திவாரம் 10 அங்குல அளவில் 50 அடுக்குகளாக அடா்த்தியான கட்டடக் கலவை கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் வரும் அக்டோபா் மாதம் நிறைவடையும். அதனைத் தொடா்ந்து, தரைக்கு மேல் பகுதியில் அமையவிருக்கும் இளஞ்சிவப்பு நிற கற்களைக் கொண்டு உருவாக்கப்படும் பிம்மாண்ட கோயிலின் தூண் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் வரும் டிசம்பா் மாதம் தொடங்கப்படும்.

மிா்சாபூரிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக இளஞ்சிவப்பு கற்களை வெட்டி, தேவையான அளவில் வடிவமைக்கும் பணிகள் கோயில் வளாகத்திலேயே நடைபெறும்.

கட்டுமானப் பணி முழுவீச்சில் இரண்டு ஷிஃப்டுகளாக 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பகுதியிலிருந்து இதுவரை 1.2 லட்சம் கன சதுர மீட்டா் அளவில் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com