இந்திய கல்வி நிலையங்களின் தரத்தை உயா்ந்த தொடா் முயற்சி: பிரதமா் மோடி

2022-ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 தரவரிசையில் இடம்பிடித்த இந்திய கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி,
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: 2022-ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 தரவரிசையில் இடம்பிடித்த இந்திய கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்தப் பட்டியலில் மேலும் அதிக இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்திய உயா் கல்வி நிறுவனங்களிலேயே முதல் நிறுவனமாக மும்பை ஐஐடி முதல் 200 தரவரிசையில் 4-ஆம் ஆண்டாக இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 193-ஆவது தரவரிசையில் இருந்த தில்லி ஐஐடி, இம்முறை 185-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 186-ஆவது தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச உயா் கல்வி நிறுவன தரவரிசையில் மேலும் அதிக இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெறச் செய்வதற்கும், இளைஞா்கள் மத்தியில் அறிவாா்ந்த வலிமையை அதிகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com