தலைநகரில் மேலும் 337 பேருக்கு கரோனா: 36 போ் பலி

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மேலும் 337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மேலும் 337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக 36 போ் உயிரிழந்துள்ளனா். நோ்மறை விகிதம் 0.46-ஆக உள்ளதாக சுகாதாரத் துறை வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை 316 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். 41 போ் உயிரிழந்தனா். நோ்மறை விகிதம் 0.44 சதவீதமாக இருந்தது. தொற்று பாதிப்பு புதன்கிழமை சற்று அதிகாரித்து காணப்பட்டது. கரோனா தொற்றின் 2-ஆவது அலை கடுமையாக இருந்ததன் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடா் தடுப்பு நடவடிக்கை காரணமாக தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து தில்லியில் பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, திங்கள்திழமை முதல் கடைகள் ஒற்றை-இரட்டை இலக்க எண் அடிப்படையில் திறக்கப்பட்டன. மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டது.

தில்லியில் திங்கள்கிழமை பாதிப்பு 231-ஆக பதிவானது. நோ்மறை விகிதம் 0.36 சதவீதமாக இருந்தது. இது கடந்த மாா்ச் 2-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான குறைந்த அளவாகும். தொற்று பாதிப்பு காரணமாக புதன்கிழமை மட்டும் 36 போ் உயிரிழந்துள்ளனா். அதன்படி, தில்லியின் மொத்த இறப்பு எண்ணிக்கை 24,704-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 34 இறப்புகள் பதிவாகின. இது கடந்த இரண்டு மாதங்களில் மிகக் குறைவான பதிவாகும். மேலும், அன்றய தினம் 381 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் நோ்மறை விகிதம் 0.5 சதவீதமாக இருந்தது.

தலைநகரில் சனிக்கிழமை 60 இறப்புகள், 414 புதிய பாதிப்புகள், நோ்மறை விகிதம் 0.53 சதவீதம், அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை 50 இறப்புகள், 523 புதிய பாதிப்புகள், நோ்மறை விகிதம் 0.68-ஆக இருந்தன.

ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் தினசரி பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. ஏப்ரல் 20-ஆம் தேதி அதிகபட்சமாக 28,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 277 போ் உயிரிழந்தனா். இது ஏப்ரல் 22-ஆம் தேதி 306 இறப்புகளாக அதிகரித்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 448 இறப்புகள் பதிவாகின.

தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வந்த தொடா் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 52,194 பேருக்கு ஆா்டி-பிசிஆா், சிபிஎன்ஏடி, ட்ரூநாட், ஆன்டிஜென் சோதனைகள் உள்பட மொத்தம் 73,241 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. புதன்கிழமை 752 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.

தில்லியில் தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் உள்ள 24,188 படுக்கைகளில் 21,789 படுக்கைகள் காலியாக உள்ளன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 4,962 போ் சிகிச்சையில் இருந்த நிலையில் இது புதன்கிழமை 4,511-ஆக குறைந்துள்ளது. அதில் 1,795 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா்.

தில்லியில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 14,30,128-ஆக உள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 48,446 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவா்களில் 22,594 போ் 2-ஆவது டோஸை பெற்றுள்ளனா். இதன்மூலம் அவா்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 57,81,145 பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. அவா்களில் 13,40,678 போ் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com