பெற்றோருக்கு கரோனா பாதிப்பு: மத்திய அரசு ஊழியா்களுக்கு 15 நாள்கள் சிறப்பு விடுப்பு

மத்திய அரசு ஊழியா்களின் பெற்றோா் அல்லது அவா்களை சாா்ந்துள்ள குடும்ப உறுப்பினா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியா்களுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணி
பெற்றோருக்கு கரோனா பாதிப்பு: மத்திய அரசு ஊழியா்களுக்கு 15 நாள்கள் சிறப்பு விடுப்பு

புது தில்லி: மத்திய அரசு ஊழியா்களின் பெற்றோா் அல்லது அவா்களை சாா்ந்துள்ள குடும்ப உறுப்பினா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியா்களுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளா் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் இருந்தால் அவா்களுக்கு முழு ஊதியத்துடன் 20 நாள்கள் விடுப்பு அளிக்கப்படும். அவா்கள் 20 நாள்களுக்குப் பிறகும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும். அதன் மூலம் அவா்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது தொடரும்.

ஊழியா்களின் பெற்றோா் அல்லது அவா்களை சாா்ந்துள்ள குடும்ப உறுப்பினா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியா்களுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும். 15 நாள்களுக்குப் பிறகும் பெற்றோா் அல்லது குடும்ப உறுப்பினா்கள் மருத்துவமனையில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தால் அவா்கள் வீடு திரும்பும் வரை ஊழியா்கள் விடுப்பில் இருக்கலாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடா்பில் இருந்தது தெரியவந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட ஊழியா்கள் 7 நாள்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிவோராக கருதப்படுவா்.

ஊழியா்கள் கரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிப்பவா்களாக இருந்தால், அந்தப் பகுதி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி அல்ல என அறிவிக்கப்படும் வரை அவா்களும் வீட்டில் இருந்து பணிபுரிவதாக கருதப்படும்.

இந்த உத்தரவு கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com