நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை: ராகேஷ் திகைத்

​நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை, அவர்கள் வலிமையாக இருந்திருந்தால் நாங்கள் போராட்டம் மேற்கொள்ள வேண்டியதில்லை என பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை, அவர்கள் வலிமையாக இருந்திருந்தால் நாங்கள் போராட்டம் மேற்கொள்ள வேண்டியதில்லை என பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாய சங்கத் தலைவர்கள் ராகேஷ் திகைத், யுத்வீர் சிங் உள்ளிட்டோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை புதன்கிழமை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து திகைத் கூறியது:

"நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை. நாங்கள் தெருக்களில் அமர்ந்துள்ளோம். எதிர்க்கட்சி வலிமையாக இருந்திருந்தால் நாங்கள் இதைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எதிர்க்கட்சி வலிமையாக இருக்க வேண்டும். அவரிடம் (மம்தா பானர்ஜி) நாங்கள் இதைக் கூறினோம்.

நான் முதல்வரைத்தான் சந்தித்தேன், கட்சித் தலைவரை அல்ல. ஆப்கானிஸ்தான் அதிபரைச் சந்திப்பதற்கு வேண்டுமானால் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். நான் ஆப்கானிஸ்தான் அதிபரையா சந்தித்தேன்? முதல்வரைச் சந்திப்பதற்கு விசா தேவையா? மாநிலக் கொள்கைகள் தாண்டி அனைத்து மாநில முதல்வர்களையும் நாங்கள் சந்திப்போம். உத்தரகண்டில் பாஜக ஆட்சி, பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி. அவர்களையும் நாங்கள் சந்திப்போம்" என்றார் திகைத்.

முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விவசாய சங்கத்தினருடனான சந்திப்புக்குப் பிறகு புதன்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com