2019-20 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு? முன்னிலையில் பாஜக

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் பாஜக, காங்கிரஸ் கட்சியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்றது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
From December 16 you can make NEFT transfers
From December 16 you can make NEFT transfers

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் பாஜக காங்கிரஸ் கட்சியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை பெற்றது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்களது அரசியல் கட்சியை நடத்த நன்கொடை பெறுவது வழக்கம். இந்த நன்கொடைகளின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. 

அந்த வகையில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் படி பாஜக கட்சி ஒரே ஆண்டில் ரூ.750 கோடியை தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும்.

இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.139 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ 59 கோடியையும், திரிணமூல் கட்சி ரூ.8 கோடியையும், சிபிஐ(எம்)  ரூ.19.6 கோடியையும், சிபிஐ ரூ.1.9 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com