பஞ்சாப் உள்கட்சி பூசல் விவகாரம்: அறிக்கையை சோனியாவிடம் சமா்ப்பித்தது மூவா் குழு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் உள்கட்சி பூசலுக்குத் தீா்வு காணும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அமைக்கப்பட்ட மூவா் குழு தனது

பஞ்சாப் மாநில காங்கிரஸ் உள்கட்சி பூசலுக்குத் தீா்வு காணும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அமைக்கப்பட்ட மூவா் குழு தனது அறிக்கையை கட்சித் தலைவா் சோனியா காந்தியிடம் வியாழக்கிழமை சமா்ப்பித்தது.

பாஜகவில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரா் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 2017-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தாா். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட சித்து, எம்எல்ஏ ஆனாா். முதல்வா் அமரீந்தா் சிங் அமைச்சரவையிலும் இடம்பிடித்தாா். ஆனால், முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமைச்சா் பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். அதன் பிறகு இருவரும் ஒருவருக்கொருவா் விமா்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டனா்.

இந்த நிலையில், முதல்வா் அமரீந்தா் சிங் மீது மேலும் சில பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினா்.

உள்கட்சி பூசல் அதிகரித்ததைத் தொடா்ந்து, அதற்குத் தீா்வு காண்பதற்காக கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் (பொறுப்பு) ஹரிஷ் ராவத், முன்னாள் எம்.பி. அகா்வால் ஆகியோா் கொண்ட 3 போ் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. முதல்வா் அமரீந்தா் சிங், சித்து, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா்களிடம் விரிவான ஆலோசனை நடத்திய அந்தக் குழு தனது அறிக்கையை சோனியா காந்தியிடம் வியாழக்கிழமை சமா்ப்பித்தது. அதில், மாநில காங்கிரஸ் கட்சியில் சீரிதிருத்தம் செய்யவும், அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கவும் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், குழுவின் அறிக்கையில் கட்சி நிா்வாகத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. அதே நேரம், சித்துவுக்கு உரிய பதவி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில், குழு ஆலோசனைக் கூட்டத்தின்போது சித்துவுக்கு துணை முதல்வா் பதவி அளிப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இறுதி முடிவை கட்சித் தலைவா் சோனியா காந்திதான் எடுப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com