பெட்ரோல், டீசல் விலை உயா்வு ஏன்?மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் வலியுறுத்தினாா்.

கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்படுவதற்கான காரணம் குறித்து பொதுமக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசலுக்கான கொள்முதல் விலையைவிட வரி விதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முன்வராத மத்திய அரசு, தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலையை மட்டும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாயை எதற்காகக் செலவிடுகிறது என்பதை விளக்க வேண்டும்.

தேசிய அளவில் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. புதிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், ரூ. 35-க்கு கொள்முதல் செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு ரூ. 65 வரி செலுத்துவது ஏற்புடையதாக இல்லை.

மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதிலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com