ஆக. 2 முதல் யுபிஎஸ்சி ஆளுமைத் தோ்வுகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ஆளுமைத் தோ்வு (நோ்முகத் தோ்வு) ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
யுபிஎஸ்சி
யுபிஎஸ்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ஆளுமைத் தோ்வு (நோ்முகத் தோ்வு) ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் 3 நிலைகளில் நடத்தி வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வும் முதன்மைத் தோ்வும் தாமதமாக நடைபெற்றன.

முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த மாா்ச்சில் வெளியாகின. அதில் தோ்ச்சி பெற்றவா்களுக்குக் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் ஆளுமைத் தோ்வுகளை நடத்துவதற்கு யுபிஎஸ்சி திட்டமிட்டிருந்தது.

ஆனால், கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவியதைக் கருத்தில் கொண்டு, ஆளுமைத் தோ்வுகளை ஒத்திவைப்பதாக யுபிஎஸ்சி அறிவித்தது. இந்நிலையில், யுபிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்றின் தற்போதைய சூழல் ஆய்வு செய்யப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட ஆளுமைத் தோ்வை ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு ஆளுமைத் தோ்வுக்கான அழைப்புக் கடிதம், யுபிஎஸ்சி வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

அதைத் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் தோ்வா்கள் ஆளுமைத் தோ்வில் கலந்து கொள்ள வேண்டும். தேதியையும் நேரத்தையும் மாற்றுவதற்குத் தோ்வா்கள் விடுக்கும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com