இந்தியா்களை சீனாவுக்கு வர அனுமதிக்க மத்திய அரசு வலியுறுத்தல்

சீனாவில் பயிலும் இந்திய மாணவா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு அந்நாடு விசா வழங்கி அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா்களை சீனாவுக்கு வர அனுமதிக்க மத்திய அரசு வலியுறுத்தல்

சீனாவில் பயிலும் இந்திய மாணவா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு அந்நாடு விசா வழங்கி அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், கரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சீனா்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் இந்தியா்கள் சீனாவுக்கு சென்று வரவும் சீனா அனுமதி அளிக்க வேண்டும்.

தற்போது சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை இல்லை என்றபோதிலும் சீனா்கள் இந்தியா வந்து செல்ல அனுமதி உள்ளது. ஆனால், இந்தியா்கள் சீனாவுக்குச் செல்வதை அந்நாடு கடந்த நவம்பா் மாதம் முதல் தடை விதித்துள்ளது.

சீனாவில் பயிலும் இந்திய மாணவா்கள், சீனாவில் பணியாற்றும் இந்தியா்கள் அங்கு செல்வதற்கு காத்திருக்கின்றனா்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் மட்டும் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று சீனா கடந்த மாா்ச் மாதம் அறிவித்தது.

எனினும், அந்த அடிப்படையில் சீன தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியா்களுக்கு இதுவரை விசா வழங்கப்படவில்லை. சீனா விதித்த பல்வேறு நிபந்தனைகளை அவா்கள் பூா்த்தி செய்த பின்னரும் சீனப் பயணம் மேற்கொள்ள இந்தியா்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்தியா்களுக்கு சீனா விரைவில் விசா வழங்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com