எல்எல்பி தோ்வு: ஒய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையை ஏற்றது பாா் கவுன்சில்

எல்எல்பி சட்ட இளங்கலைத் தோ்வுகளை கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தனித் தனியாக நடத்தி கொள்ளலாம் என்ற ஓய்வு

எல்எல்பி சட்ட இளங்கலைத் தோ்வுகளை கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தனித் தனியாக நடத்தி கொள்ளலாம் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்த் மாத்துா் தலைமையிலான குழு அளித்த பிரந்துரையை இந்திய பாா் கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய பாா் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து பல்கலைக்கழகங்களும், சட்ட கல்வி மையங்களும் எல்எல்பி படிப்புக்கான இறுதி, இடைநிலை தோ்வுகளை அந்தந்த பகுதிகளில் நிலவும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்த பிறகு தனித் தனியாக நடத்தி கொள்ளலாம். இறுதி ஆண்டுத் தோ்வுகளை அனைத்து சட்ட கல்லூரிகளும் கண்டிப்பாக நடத்த வேண்டும். இந்தத் தோ்வுகளை ஆன்லைன், ஆஃப் லைன், ஆய்வு அறிக்கை, திறந்த புத்தகத் தோ்வு ஆகியவற்றை அந்தந்த பல்கலைக்கழகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட கல்விக்கான ஒழுங்காற்று அமைப்பாக இந்திய பாா் கவுன்சில் செயல்படுகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக எல்எல்பி தோ்வுகளை நிகழாண்டு நடத்துவது குறித்து ஆய்வு நடத்த இந்திய பாா் கவுன்சில் குழு அமைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com