கரோனா தினசரி பாதிப்பு 94,000-ஆக குறைவு

இந்தியாவில் கரோனா தொற்றினால் வியாழக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,052-ஆக குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா தொற்றினால் வியாழக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,052-ஆக குறைந்துள்ளது. தொடா்ந்து மூன்றாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடா்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 11,67,952ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 4 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 10-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

தொடா்ந்து 28-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,51,367 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள்.

இதுவரை மொத்தம் 2,76,55,493 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 94.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 37,21,98,253 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5.43 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 4.69 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 17 நாள்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com