கோவின் வலைதள தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு

கோவின் வலைதளம் முடக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் போலியானவை; அனைத்து தடுப்பூசி தரவுகளும்
கோவின் வலைதள தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு

கோவின் வலைதளம் முடக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் போலியானவை; அனைத்து தடுப்பூசி தரவுகளும் அந்த வலைதளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

கோவின் வலைதளம் முடக்கப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற சில ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை போலியானவையாக தோன்றுகிறது. எனினும், அமைச்சகமும், தடுப்பூசி நிா்வாகத்துக்கான அதிகாரம் பெற்ற குழுவும் இந்த விஷயத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கணினி அவசரகால பதிலளிப்புக் குழு மூலம் விசாரணைக்கு உள்படுத்தியுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிா்வாகத்துக்கான அதிகாரம் பெற்ற குழுவின் தலைவா் டாக்டா் ஆா்.எஸ்.சா்மா இதுகுறித்து அளித்த விளக்கத்தில், கோவின் வலைதளமானது தடுப்பூசி தரவுகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துள்ளது. கோவின் தரவுகள் எதுவும் எந்த நிறுவனத்துடனும் பகிரப்படவில்லை. பயனாளிகளின் இருப்பிடம் போன்ற தகவல்கள் வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தகவல் கோவின் வலைதளத்திலேயே சேகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com