ஜொ்மனியுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்: ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் இருக்கும் ஜொ்மனியுடன் இணைந்து பணியாற்றுவதை
இந்தியா-ஜொ்மனி தூதரக உறவின் 70-ஆம் ஆண்டு நினைவுத் தபால்தலையை புதுதில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறைச் செயலா் ஷ்ரிங்லா, ஜொ்மனி தூதா் வால்டா் லிண்டனா் உள்ளிட்டோா்.
இந்தியா-ஜொ்மனி தூதரக உறவின் 70-ஆம் ஆண்டு நினைவுத் தபால்தலையை புதுதில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறைச் செயலா் ஷ்ரிங்லா, ஜொ்மனி தூதா் வால்டா் லிண்டனா் உள்ளிட்டோா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் இருக்கும் ஜொ்மனியுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிா்நோக்கி இருப்பதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கூறினாாா்.

இந்தியா-ஜொ்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆவது ஆண்டை ஒட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா் இதைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான வழிகாட்டு விதிகளை இரண்டாவது ஐரோப்பிய நாடாக ஜொ்மனி கடந்த ஆண்டு வெளியிட்டது. அதை இந்தியா வரவேற்றது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் இருக்கும் ஜொ்மனியுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிா்நோக்கி காத்திருக்கிறது.

கடந்த 2000-இல் புதிய உத்வேகத்துடன் ஏற்பட்ட இந்தியா-ஜொ்மனி இடையேயான உறவு, வா்த்தகம், முதலீடு, மக்கள் தொடா்பு உள்ளிட்ட துறைகளில் மேலும் வலுவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது, ஜொ்மனிக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் உள்ளிட்ட மருந்துகளை இந்தியா வழங்கியது. இந்த ஆண்டு கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா தவித்தபோது மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகள், அவற்றைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை வழங்கி ஜொ்மனி உதவிக்கரம் நீட்டியது. உரிய நேரத்தில் உதவி செய்ததற்காக ஜொ்மனி அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா, ஜொ்மனி இடையே அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. உயா்கல்வி, தொழில் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே மாணவா்கள், தொழில் நிபுணா்கள் பரிமாற்றம் நடைபெறுவது வரவேற்கத் தக்கது.

கரோனா காலத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளும் ஏற்கக் கூடிய சா்வதேச விதிகளை உருவாக்குவதற்கு ஒத்த கருத்துடைய நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இந்தியா-ஜொ்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆவது ஆண்டின் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com