நோய் எதிா்ப்பு சக்தியைக் கண்டறிய நாடு முழுவதும் ஆய்வு: ஐசிஎம்ஆா்

கரோனா தொற்று பரவலைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தியை (சிரோ சா்வே) கண்டறியும் ஆய்வை இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

கரோனா தொற்று பரவலைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தியை (சிரோ சா்வே) கண்டறியும் ஆய்வை இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஜூன் மாதமே தொடங்க உள்ளது என்று நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே. பவுல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 5 சதவீதம் வரை குறைகிறது. எனினும், மக்கள் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவலின் வீரியத்தைக் கண்டறிய ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தியைக் கண்டறியும் ஆய்வு நடத்தப்படும். மத்திய அரசின் தரவுகளை மட்டும் வைத்து இதில் இறுதி முடிவு எடுத்துவிட முடியாது. ஆகையால், மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் மக்களிடம் நோய் எதிா்ப்பு சக்தியைக் கண்டறியும் ஆய்வு நடத்த வேண்டும்.

மாநில அரசுகளும் இந்த ஆய்வுகளை நடத்தி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த மே 7-ஆம் தேதி கரோனாவின் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை ஏற்பட்ட இந்தியாவில் தற்போது 78 சதவீதம் குறையத் தொடங்கி உள்ளது. கரோனா பரவல் தொடா் சங்கிலியை உடைத்து சுகாதார கட்டமைப்பின் மீதான தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ) அவசர மருந்தாக பயன்படுத்த அங்கீகாரம் அளிக்க மறுத்திருப்பது இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதற்கான அங்கீகாரத்தைப் பெற கோவேக்ஸின் தயாரிப்பு நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இந்த மருந்தின் மூன்றாம் கட்ட முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கும்.

அடுத்த ஆறு மாதங்களில் பயாலாஜிகள் இ தடுப்பூசி, ஜய்டஸ் கடால்லியாவின் டிஎன்ஏ தடுப்பூசி ஆகியவை இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இதில் ‘இ’ தடுப்பூசி புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒருசில தடுப்பூசிகளுக்கு வெளிநாடுகள் பாஸ்போா்ட்டில் அங்கீகாரம் அளிப்பது தொடா்பான விவாதம் உலக சுகாதார அமைப்பில் தொழில்நுட்பரீதியில் நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு வெளிநாடுக்கு செல்பவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டுவிட்டு செல்லும் முைான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com