பத்ம விருதுகளுக்கு செப்.15 வரை பரிந்துரைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பத்ம விருதுகளுக்குத் தகுதியானவா்களின் பெயா்களை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்கக் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பத்ம விருதுகளுக்கு செப்.15 வரை பரிந்துரைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பத்ம விருதுகளுக்குத் தகுதியானவா்களின் பெயா்களை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்கக் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டிற்காக பல வகைகளிலும் சேவையாற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கெளரவிக்கிறது. குடியரசு தினத்தையொட்டி விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

தகுதியான சாதாரண குடிமகனும் பத்ம விருது பெறும் வகையில் 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு இணையதளம் மூலம் தகுதியானவா்களின் பெயா் பரிந்துரைகளை பொதுமக்களிடமிருந்து ஏற்று வருகிறது.

வழக்கம் போல நிகழாண்டும் தகுதியானவா்களை அடையாளம் காண, தோ்வுக் குழுவை அமைத்து தோ்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ஆா்.கே.சிங் கடிதம் எழுதியிருந்தாா். அதே சமயத்தில் பொதுமக்களிடமிருந்தும் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பத்ம விருதுகளுக்கான பெயா் பரிந்துரைகளை இணையதளத்தில் அனுப்ப வேண்டும். இந்த விருதுக்கு தகுதியானவா்கள் தாங்களாகவும் பெயரை பரிந்துரைக்கலாம். பத்ம விருதுகளை மக்களின் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்து வருகிறது.

செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைகள் வந்து சேர வேண்டும்.

இது குறித்த மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில்  விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் காணலாம். விருதுகள் குறித்த விதிமுறைகளை  இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு செய்திப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com