இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 84,332-ஆக குறைவு: ஒரே நாளில் 4,002 பேர் பலி

இந்தியாவில் கரோனா தொற்றினால் சனிக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84,332 -ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 84,332-ஆக குறைவு: ஒரே நாளில் 4,002 பேர் பலி

இந்தியாவில் கரோனா தொற்றினால் சனிக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84,332 -ஆக குறைந்துள்ளது. தொடா்ந்து ஐந்தாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடா்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 4,4003 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3,67,081போ் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 19 -ஆம் தேதி 4552 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச தினசரி உயிரிழப்பாக இதுவரை இருந்து வந்தது. 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 10,80,690 -ஆக உள்ளது. 

தொடா்ந்து 30-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,21,311 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். 

இதுவரை மொத்தம் 2,79,11,384  போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 95.07 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 30-ஆவது நாளாக தினசரி புதிய தொற்று பாதிப்புகளை விட, குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைந்து வருபவர்களின் வீதம் 94.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.25 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 24,96,00,304 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com