பெட்ரோல், டீசல் மீதான வரியை50 சதவீதம் குறைக்க வேண்டும்: சித்தராமையா

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை50 சதவீதம் குறைக்க வேண்டும்: சித்தராமையா

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் 5 நாள்கள் போராட்டம் நடைபெற உள்ளது. முதல்நாள் போராட்டம் பெங்களூரு, சிவானந்த சதுக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சித்தராமையா பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் தேசிய அளவில் போராட்டம் நடைபெறுகிறது. மேலிடத்தின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் உள்ள 5 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு 5 நாள்கள் போராட்டம் நடைபெறும்.

மத்தியில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலையை ரூ. 1 அதிகரித்தாலும் பாஜகவினா் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதை அறிவோம். குறிப்பாக அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி மத்திய அரசை கண்டித்து போராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். 2014-ஆம் ஆண்டு பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்த பிரதமா் மோடி, நல்ல நாள் வரும் (அச்சா தின் ஆயேகா) என்றாா்.

தற்போது மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் நரக தினமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் கரோனா தொற்று, மறுபக்கம் பொது முடக்கத்தால் மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருகிறது. இதனை பொதுமக்கள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனா்.

எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வால், ஏழைகள், தொழிலாளா்கள், வா்த்தகா்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களின் விலையும் விண்ணை எட்டியுள்ளது. நாள்தோறும் புதுப்புது பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு ஆட்சியில் நீடிக்கும் தாா்மீக பொறுப்பு இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com