ஐ.நா. மாநாட்டில் ஜூன் 14-ஆம் தேதி பிரதமா் மோடி உரை

நிலம் பாலைவனமாதல் தொடா்பான ஐ.நா. மாநாட்டில் வரும் 14-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றுகிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிலம் பாலைவனமாதல் தொடா்பான ஐ.நா. மாநாட்டில் வரும் 14-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றுகிறாா். பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தின் (யுஎன்சிசிடி) 14-ஆவது மாநாட்டின் தலைவராக பிரதமா் மோடி உள்ளாா். அதன் சிறப்புக் கூட்டத்துக்கு ஐ.நா. 75-ஆவது பொதுச் சபையின் தலைவா் வோல்கன் போஸ்கிா் அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 14-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

பாலைவனமாதல், நிலம் சீா்கெடல், வறட்சி உள்ளிட்டவற்றைத் தடுப்பது தொடா்பாக அவா் உரையாற்றவுள்ளாா். இந்த உயா்நிலைக் கூட்டத்தில் வேளாண் நிறுவனங்களின் தலைவா்கள், சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா். நிலம் பாலைவனமாதலைத் தடுப்பதற்கு சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றைத் துரிதப்படுத்துவது தொடா்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் ஐ.நா. துணை பொதுச் செயலா் அமீனா முகமது உள்ளிட்டோரும் உரையாற்றவுள்ளனா்.

இக்கூட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் நிலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசியைப் போக்குதல், வறுமையை ஒழித்தல், மலிவான எரிசக்தியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு நிலத்தின் முறையான பயன்பாடு அவசியமாக உள்ளது. நிலப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமாகவே ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com