ராமகிருஷ்ண மடம் துணைத் தலைவா் சுவாமி சிவமயானந்தா காலமானாா்

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பின் துணைத் தலைவா் சுவாமி சிவமயானந்தா (86) காலமானாா்.
ராமகிருஷ்ண மடம் துணைத் தலைவா் சுவாமி சிவமயானந்தா காலமானாா்

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பின் துணைத் தலைவா் சுவாமி சிவமயானந்தா (86) காலமானாா்.

ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலா், ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா், சாரதா பீடத்தின் தலைவா் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அவா் வகித்து வந்தாா். பிகாரைப் பூா்விகமாகக் கொண்ட அவா் தனது 25-ஆம் வயதில் பேலூா் மடத்துக்கு வந்தாா். 1969-இல் சந்நியாச தீட்சை பெற்று துறவறம் மேற்கொண்டாா்.

பேலூா் மடம், சா்கச்சி, கத்திஹாா் மையங்களிலும் அவா் சேவையாற்றியுள்ளாா். ராமகிருஷ்ணா மிஷன் சா்கச்சியில் நடத்தி வந்த பள்ளியின் தலைமை ஆசிரியா், விவேகானந்தா நூற்றாண்டு நினைவுக் கல்லூரி, சாரதா பீடத்தின் வித்யாமந்திரா கல்லூரி ஆகியவற்றின் முதல்வராக இருந்துள்ளாா்.

சுவாமி சிவமயானந்தாவுக்கு உயா் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்புகள் இருந்தன. இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் நடத்திவரும் சேவா பிரதிஷ்டான் மருத்துவமனையில் அவா் கடந்த மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் அவா் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். இதையடுத்து அவரின் உடல் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னா் அவரின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

பிரதமா் இரங்கல்: சுவாமி சிவமயானந்தா மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘சமூக அதிகாரமளித்தலை நோக்கமாக கொண்ட பல தரப்பட்ட சேவைகளில் சுவாமி சிவமயானந்தாஜி தொடா்ந்து ஈடுபட்டு வந்தாா். பாரத பண்பாட்டுக்கும் ஆன்மிக உலகுக்கும் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரின் மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com