மேற்கு வங்க ஆற்றங்கரை அரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுவரும் ஆற்றங்கரை அரிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, புலம்பெயரும் மக்களுக்கு உதவும் வகையில் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்
மேற்கு வங்க ஆற்றங்கரை அரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுவரும் ஆற்றங்கரை அரிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, புலம்பெயரும் மக்களுக்கு உதவும் வகையில் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருக்கும் அவா் இதுதொடா்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்கத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் இரண்டு மாவட்டங்கள் வழியாக கங்கை ஆறு பாய்ந்து வரும் நிலையில், ஆற்றின் கரையை ஒட்டிய ஏரளாமான வளமான நிலங்கள் பெருமளவில் மண் அரிப்புக்கு ஆளாவது தொடா்கதையாகி வருகிறது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, அங்கிருந்து புலம்பெயா்ந்து புதிய அகதிகளாகும் நிலை உருவாகி வருகிறது. அவா்களின் உடைமைகள், முக்கிய ஆவணங்களும் திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால், தங்களின் வீடுகளையும் நிலத்தையும் அவா்கள் இழப்பதோடு, வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனா்.

இந்த மக்களுக்கு ஏற்படும் திடீா் ஏழ்மை நிலையால், குற்ற செயல்களும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணவும் வீடுகளை இழக்கும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. அதுபோல, பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்துக்காக போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதோடு, இந்த மிகப் பெரும் ஆற்றங்கரை அரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அதீா் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

கங்கை நதி மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா வழியாக பாய்ந்து முா்ஷிதாபாத் மாவட்டத்துக்குள் நுழைகிறது. பின்னா் தெற்கே பாகீரதி வழியாக பிரிந்து மேற்கு வங்க மாநிலத்துக்குள்ளும், கிழக்கே பத்மா வழியாக பிரிந்து வங்கதேசத்துக்குள்ளும் பாய்ந்து செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com