குஜராத் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கேஜரிவால்

​குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தார்.

ஆமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் மேலும் கூறியது:

"தில்லியில் மின்சாரம் இலவசம் என்றால் குஜராத்திலும் ஏன் அது சாத்தியப்படாது என மக்கள் இங்கு நினைக்கின்றனர். இதேபோல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் நிலையும் கடந்த 70 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. ஆனால், தற்போது மாற்றங்கள் நிகழும்.

தில்லியின் மாதிரி திட்டம் குஜராத்துக்குக் கொண்டுவரப்படாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் உள்ளன. அதற்கேற்ப தீர்வுகளும் உள்ளன. குஜராத்துக்கான திட்டத்தை குஜராத் மக்களே தீர்மானிப்பார்கள். குஜராத் மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸுக்கான மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும்" என்றார் அவர்.

குஜராத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com