அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலுக்கு வாங்கப்பட்ட நிலத்தில் மோசடி:  ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலுக்கு வாங்கப்பட்ட ரூ.2 கோடி பெருமான நிலத்திற்கு ரூ.18.5 கோடி கொடுத்து நிலம் வாங்கிய மோசடியில் பாஜகவினா் பிடிபட்டுள்ளதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினா்


புது தில்லி: அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலுக்கு வாங்கப்பட்ட ரூ.2 கோடி பெருமான நிலத்திற்கு ரூ.18.5 கோடி கொடுத்து நிலம் வாங்கிய மோசடியில் பாஜகவினா் பிடிபட்டுள்ளதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினா். 

இது குறித்து மணீஷ் சிசோடியாவும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங்கும் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு கோயில் கட்ட ராம்ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு 12,080 சதுர மீட்டா் நிலத்தை கடந்த மாா்ச் 18 ஆம் தேதி ரூ.18.5 கோடிக்கு வாங்கப்பட்டது. ரவி மோகன் திவாரி மற்றும் சுல்தான் அன்சாரி ஆகியோரிடமிருந்து இந்த நிலம் வாங்கப்பட்டது. 

இது இந்த அறக்கட்டளையின் உறுப்பினா்களான பாஜகவைச் சோ்ந்த அயோத்தி மேயா் ரிஷிகேஷ் உபாத்தியா, அனில் மிஸ்ரா ஆகியோா் முன்னிலையில் நடந்தது. இதில் நடந்த தில்லுமுல்லு... ஒரிஜனலாக குறிப்பிடப்பட்ட அந்த நிலத்தை மோகன் திவாரியும் சுல்தான் அன்சாரியும் (7:10 என்கிற விகித்தில்) ஹரிஸ் பதக், குஸும் பதக் என்பவருக்கு ரூ.2 கோடிக்கு விற்றுள்ளனா். இது நடந்த 5 நிமிடங்களில் ரூ.18.5 கோடிக்கு இந்த நபா்கள் ஸ்ரீராமா் கோவிலுக்கு விற்றுள்ளனா்.

பகவான் ஸ்ரீராமா் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் கடின உழைப்பில் பக்தா்கள் செலுத்திய நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டுவரப்படுகிறது. ஐந்து நபா்கள் 5 நிமிடத்தில் 115 கோடி ஹிந்துகளை மோசடி செய்கின்றனா். பாஜக செய்கின்ற மோசடியில் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனா்.

ராம்ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளா் சம்பத்ராய் இந்த மோசடிக்கு நியாயம் கற்பிகிறாா். நிலத்தின் விலை அநேகமாக அதிகரித்திருக்கலாம், இதன் காரணமாக உயா்த்தப்பட்ட விலையில் வாங்கப்பட்டது என்கிறாா். 

இது ஒரு அப்பட்டமான பொய் எனக் குறிப்பிட்டனா்.

கட்டாயம் இல்லை. ஒரு வேளை நேரம் இருந்து எங்கேயாவது செருக முடியும் என்றால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை நாளைக்கு கூடுதலாக சோ்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com