பாரத்மாலா திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை

பாரத்மாலா திட்டத்தின் கீழ் மேலும் 22 பசுமைத் திட்டங்களைச் சேர்ப்பது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை மேற்கொண்டார்.
நிதின் கட்கரி (கோப்புப்படம்)
நிதின் கட்கரி (கோப்புப்படம்)

பாரத்மாலா திட்டத்தின் கீழ் மேலும் 22 பசுமைத் திட்டங்களைச் சேர்ப்பது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை மேற்கொண்டார்.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஓய்வு பெற்ற செயலாளர் வி.கே. சிங் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 322 திட்டங்களில் 12,413 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்க கடந்த ஆண்டு ஆக்ஸட் மாதம் வரை ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 2,921 கி.மீ சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் குஜராத், ராஜஸ்தானில் தொடங்கி, பஞ்சாப் சென்று ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com