ஜல் ஜீவன் திட்டம்: ஆந்திரத்துக்கு ரூ.3183 கோடி ஒதுக்கீடு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 3182.88 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டம்: ஆந்திரத்துக்கு ரூ.3183 கோடி  ஒதுக்கீடு

புது தில்லி: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 3182.88 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 2020-21ஆம் ஆண்டு ரூ. 790.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது நான்கு மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் 18650 கிராமங்களில் மொத்தம் உள்ள 95.66 லட்சம் வீடுகளில், 46.89 லட்சம் வீடுகளுக்கு (49.02%) குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது அந்த மாநிலத்தில் 30.74 லட்சம் (32.14%) வீடுகள் மட்டுமே குடிநீா் குழாய் இணைப்புகளைப் பெற்றிருந்தன. 21 மாதங்களில் 16.14 லட்சம் (16.88%) வீடுகளில் இணைப்புகள் வழங்கப்பட்டன. இது, தேசிய சராசரி அதிகரிப்பைவிட 22% குறைவாகும்.

எஞ்சியுள்ள 48.77 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணியை அந்த மாநிலம் விரைவுப்படுத்த வேண்டும். 2021- 22-ஆம் ஆண்டில் 32.47 லட்சம் வீடுகளுக்கும், 2022-23-ஆம் ஆண்டு 12.28 லட்சம் வீடுகளுக்கும், 2023-24 ஆண்டு 6 லட்சம் வீடுகளுக்கும் இணைப்புகளை வழங்க ஆந்திர மாநிலம் திட்டமிட்டுள்ளது.

2024 மாா்ச் மாதத்துக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் இணைப்பை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து கிராமங்களிலும் குழாய் இணைப்புகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசின் செய்தி தகவல் தொடா்புப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com