எடியூரப்பா குறித்து அருண் சிங்கிடம் எம்எல்ஏ-க்கள் தெரிவிப்பார்கள்: அமைச்சர்

கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா குறித்த கருத்து மற்றும் குறைகளை மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங்கிடம் எம்எல்ஏ-க்கள் வெளிப்படுத்துவார்கள் என மாநில அமைச்சர் கேஎஸ் ஈஷ்வரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா குறித்த கருத்து மற்றும் குறைகளை மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங்கிடம் எம்எல்ஏ-க்கள் வெளிப்படுத்துவார்கள் என மாநில அமைச்சர் கேஎஸ் ஈஷ்வரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"பாஜக மாநிலப் பொறுப்பாளர் அருண் சிங் புதன்கிழமை கர்நாடகம் வருகிறார். அருண் சிங் தலைமையில் மாநில அமைச்சர்கள் கூட்டம் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. முதல்வர் பிஎஸ் எடியூரப்பா குறித்த கருத்து மற்றும் குறைகளை எம்எல்ஏ-க்கள் வெளிப்படுத்துவார்கள்.

ஜூன் 18-ம் தேதி கட்சியின் மையக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இது பாஜக. நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். கர்நாடக தலைவர்களின் கருத்தைக் கேட்டறிய மேலிடத் தலைவர்கள் அருண் சிங்கை அனுப்பியுள்ளனர். யாரும் எதையும் கேட்டறியாமல் இருக்க இது காங்கிரஸ் அல்ல."

கர்நாடக பாஜக தலைமை விவகாரத்தில் பிரச்னை நிலவி வருவதாகத் தொடர்ந்து பேச்சுகள் எழுந்து வருகின்றன. ஆனால், கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைமை உள்பட எந்த விவகாரத்திலும் எவ்விதக் குழப்பமும் இல்லை என முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com