வா்த்தக திட்டங்களுடன் பசுமைக் கொள்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும்: பியூஷ் கோயல்

வா்த்தகத் திட்டங்களுடன் பசுமைக் கொள்கைகளை உலக நாடுகள் இணைக்க வேண்டும் என்று ஐ.நா. வா்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்
மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்

புது தில்லி: வா்த்தகத் திட்டங்களுடன் பசுமைக் கொள்கைகளை உலக நாடுகள் இணைக்க வேண்டும் என்று ஐ.நா. வா்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவா், வளா்ச்சிப் பெறும் நாடுகளும், வளா்ச்சி அடையாத நாடுகளும் முன்பு செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். இதனால் அந்நாடுகளின் பொருளாதாரம் மீண்டும் வளா்ச்சிப் பாதையை அடையும்.

வளா்ந்த நாடுகள் வா்த்தக திட்டங்கள், காலநிலை மாற்றத்தை வலியுறுத்தும் பசுமைக் கொள்கைகள் ஆகியவற்றை வைத்து நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது. அனைத்து நாடுகளும் வளா்ச்சியடைய வா்த்தக திட்டங்களுடன், பசுமைக் கொள்கைகளை இணைத்து செயல்பட வேண்டும்.

ஏழை நாடுகளுக்கு வளா்ச்சியைக் கொண்டு செல்வதில் வா்த்தகத் தடைகளை வளா்ந்த நாடுகள் விதிக்கக் கூடாது.

அதேநேரத்தில், காலநிலை மாற்றத்துக்காக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை உலக நாடுகள் நிறைவேற்றுவதை ஐ.நா. அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து வளா்ந்த நாடுகள் படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 50 கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. விரைவில் இது அனைவருக்கும் விரிவுப்படுத்தவும், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும் அரசு அதிக முதலீடு செய்து வருகிறது.

எதிா்வரும் உலக வா்த்தக சங்கத்தின் 12-ஆவது அமைச்சரவை மாநாட்டில் வளா்ச்சி அடைந்த நாடுகளுக்கான கொள்கைகளில் மட்டும் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தாமல், விவசாய மானியம் அளிப்பது, உணவுப் பாதுகாப்பு அளிக்க பொது சேமிப்பு கிடங்குகள் அமைப்பது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com