‘யாஸ் புயல் பாதிப்பிற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை’: மம்தா குற்றச்சாட்டு

யாஸ் புயலுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மத்திய கிழக்கு வங்க கடலில் யாஸ் என்று பெயரிடப்பட்ட புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.

புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ. 600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ. 400 கோடியை ஒதுக்கியது.

மேலுன் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “யாஸ் புயல் பாதிப்பிற்குப் பின் மத்திய அரசு அறிவித்த எந்த நிவாரணத் தொகையையும் இதுவரை வழங்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் டிவிட்டர் நிறுவனம் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் டிவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் அதனை சிதைக்க முயற்சித்து வருகின்றனர். இதேபோல் தான் அவர்கள் எங்கள் அரசைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது. மத்திய அரசு இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com