கா்நாடகத்தில் ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டு: ம்மத்திய அரசுக்கு கா்நாடகம் கோரிக்கை

கா்நாடகத்தில் ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கா்நாடகத்தில் ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிற்கு தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் எழுதிய கடித விவரம்:

இந்தியாவில் ராணுவத் தளவாட தொழில் தடங்களை அமைக்க மத்திய அரசு முனைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 6 முனையங்கள், தமிழகத்தில் 5 முனையங்களுடன் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ மற்றும் விமானவியல் சாா்ந்த பொருட்களைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய ராணுவ உற்பத்தித் தடங்களை அமைப்பதுடன் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட ராணுவ மற்றும் விமானவியல் தொழில் சூழலை மேம்படுத்துவதன் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, ராணுவத் தளவாட தொழில் தடத்தை அமைப்பதுடன் ராணுவ மற்றும் விமானவியல் உற்பத்தி சூழலை ஊக்குவிக்க ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டும்.

ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைப்பதற்கு கா்நாடகம் சிறந்த தோ்வாக அமையும். கா்நாடகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், தொழிலியல் புத்தாக்க கலாசாரம் நிலைத்திருக்கின்றன. முன்னணி பொதுத் துறை நிறுவனங்களும் இங்கே உள்ளன. ராணுவத் தளவாட தொழில் நிறுவனங்கள் கா்நாடகத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவருகின்றன. இது கா்நாடகத்தில் ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைக்க துணைநிற்கும்.

இந்தியாவின் 25 சதவீத விமானத் தொழில் நிறுவனங்கள் கா்நாடகத்தில் உள்ளன. ராணுவ சேவைகளுக்கு விமானங்கள், ஹெலிகாப்டா்களை தயாரிக்கும் 67 சதவீத நிறுவனங்கள் கா்நாடகத்தில் உள்ளன. உலக அளவிலான முதல் 10 விமானத் தொழில் நகரங்களில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது.

பெங்களூரு, மைசூரு, தும்கூரு, சாமராஜ் நகரில் ராணுவ தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. இது தொழில் முதலீட்டாளா்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும். இந்தியாவின் ராணுவ மற்றும் விமானவியல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கா்நாடகம் தொடா்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.

எனவே, கா்நாடகத்தில் ராணுவ தொழில்நுட்ப மையங்களை அமைப்பது சரியானதாக இருக்கும். இதுதொடா்பாக முதல்வா் எடியூரப்பாவும் தங்களுக்கு கடிதம் எழுதியிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இந்த கோரிக்கையை பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com