அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது: சித்தராமையா

கா்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருவதாக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.

கா்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருவதாக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரம், காயத்ரிநகரில் வியாழக்கிழமை காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியிலிருந்து 14 எம்.எல்.ஏக்கள், மஜதவிலிருந்து 3 எம்.எல்.ஏக்களை ‘ஆபரேஷன் கமலா’ மூலம் தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டதால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 30 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்வதில் அமைச்சா்களிடையே போட்டி நிலவுகிறது.

எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றது. அந்த வளா்ச்சிப் பணிகளை இந்த அரசு வீணாக்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளால் ஏழைகளுக்கு எந்த லாபமும் இல்லை. விவசாயிகள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். ரூ. 6 ஆயிரத்துக்கு வாங்கிய விதையின் விலை தற்போது ரூ. 21 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com