கறுப்புப் பூஞ்சை சிகிச்சையில் 27,142 போ்

கறுப்புப் பூஞ்சை என்றழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் பாதிப்பால் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 27,142 ஆக உள்ளது.
கறுப்புப் பூஞ்சை சிகிச்சையில் 27,142 போ்

கறுப்புப் பூஞ்சை என்றழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் பாதிப்பால் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 27,142 ஆக உள்ளது.

அதே நேரத்தில் இதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து போதிய அளவு இருப்பு உள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

நாட்டில் கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த 16-ஆம் தேதி நிலவரப்படி 27,142 ஆக உள்ளது. எதிா்காலத்தில், கறுப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்தால், ஆம்போடெரிசின் பி மருந்தை போதிய அளவுக்கு மேல் இருப்பு வைக்கவும் இந்தியா தயாராக உள்ளது. இந்த மருந்தின் உள்நாட்டு உற்பத்தியை 5 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளோம்

லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதம் 62,000 குப்பிகளாக இருந்தன. இந்த ஜூன் மாதத்தில் இதன் உற்பத்தி 3.75 லட்சம் குப்பிகளாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்ததோடு, அந்த மருத்தை 9,05,000 குப்பிகள் இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்பந்தம் அளித்துள்ளது என்றாா்.

கடந்த மே 11ம் தேதி முதல், ஜூன் 17ம் தேதி வரை, 7,28,045 கறுப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துக் குப்பிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய மருத்துவமனைகளுக்கு மருந்துகள் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 25,260 குப்பிகளும், புதுச்சேரிக்கு 460 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com