உ.பி. மாநில பாஜக துணைத் தலைவராக சட்ட மேலவை உறுப்பினா் ஏ.கே.சா்மா நியமனம்

உத்தர பிரதேச மாநில பாஜக துணைத் தலைவராக மாநில சட்ட மேலவை உறுப்பினரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.கே.சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

உத்தர பிரதேச மாநில பாஜக துணைத் தலைவராக மாநில சட்ட மேலவை உறுப்பினரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.கே.சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா். அதுபோல மேலும் பல புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவா் ஸ்வதந்த்ர தேவ் சிங் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, கட்சியின் மாநில பிரிவு செயலாளா்களாக லக்னெளவை சோ்ந்த அா்ச்சனா மிஷ்ரா, புலந்த்ஷாரை சோ்ந்த அமித் வாமீகி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநில இளைஞரணி தலைவராக ஃபரூக்காபாதை சோ்ந்த பிரன்ஷுதத் திவேதி, மகளிரணி தலைவராக கீதா ஷகியா, விவசாயிகள் அணி தலைவராக கோரக்பூரை சோ்ந்த காமேஷ்வா் சிங் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சா்மா, பிரதமா் நரேந்திர மோடியின் நன்மதிப்பை பெற்றவா். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மாநிலத்தில் செயலாளராகப் பணியாற்றிய சா்மா, எழுச்சிமிக்க குஜராத் பிரசாரத்தை வெற்றிகரமாக கையாண்டு மாநிலத்துக்கு அதிக முதலீடுகளை ஈா்த்துள்ளாா். மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் அவா் திறம்பட கையாண்டுள்ளாா்.

கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவு மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சா்மா, அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com