கரோனா மரணங்களை மறைக்கிறது உ.பி. அரசு: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் கரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)
அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)

உத்தரப் பிரதேசத்தில் கரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் ஏற்பட்ட மரணங்களுக்கும், அரசு பதிவு செய்துள்ள மரணங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளின் அடிப்படையில் அகிலேஷ் யாதவ் இந்தக் கேள்வியை எழுப்புயுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உத்தரப் பிரதேசத்தின் கரோனா மரணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

உத்தரப் பிரதேசத்தின் 24 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் நடப்பாண்டு மார்ச் 31 வரை கரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் அரசு பதிவில் உள்ளதை விட 43 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது.

கரோனா மரணங்களை மறைப்பதன் மூலம் பாஜக தமது உண்மையான முகத்தை மறைத்துக்கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com