மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா

மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் புதன்கிழமை தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா

மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் புதன்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியதாவது,

மகாராஷ்டிரத்தில் 7 மாவட்டங்களில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கரோனா, பாதிக்கப்படுவோரின் எதிர்ப்பு சக்தியை குறைந்து விடுகிறது. 

டெல்டா வகை கரோனா கண்டறியப்படுவோரின் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி வருகின்றோம். அவர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், டெல்டா வகை கரோனாவால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் குணமடைந்துள்ளனர். புதிய வகையால் இதுவரை குழந்தைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com