உ.பி.யில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது முக்கியமான நடவடிக்கையாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் வங்கியின் வாடிக்கையாளராக இருப்பவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ். இவர் தனது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைக்காக வங்கிக்கு முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். 

இதனைக் கண்டு அவரை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய வங்கிக்காவலர் அவரை வங்கிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த வங்கிக் காவலர் ரயில்வே ஊழியர் ராஜேஷின் காலில் தனது துப்பாக்கியில் சுட்டார். 

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வங்கிக் காவலரைக் கைது செய்தனர். 

முகக்கவசம் அணியாததால் வாடிக்கையாளரின் காலில் வங்கிக் காவலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com