ஹைதராபாத்: கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் உள்ள கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஹைதராபாத்: கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் உள்ள கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மருந்தகங்கள் துறையின் செயலாளர் எஸ் அபர்ணாவும் உடனிருந்தார். 

அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதற்காக நமது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

தடுப்பூசிகளின் உற்பத்தியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com