ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசியின் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை
ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசியின் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியும் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். 

அப்போது பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதற்காக நமது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அனைவருக்கும் தடுப்பூசி உறுதி செய்வதற்காக உற்பத்தி செய்கிறது என்றும் கூறினார்.

தடுப்பூசிகளின் உற்பத்தியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மருந்துகள் துறை செயலாளர் செல்வி எஸ்.அபர்ணாவும் கலந்து கொண்டார்.

ஹதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்தியாவின் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளில் ஒன்றான 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசி  உற்பத்தி நிறுவனமான பயோலாஜிகல்-இ லிமிடெட்டை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஒரே தவணை கரோனா தடுப்பூசியான 'ஸ்பூட்னிக் லைட்' செயல்பாடுகள் குறித்து டாக்டர் ரெட்டியின் குழுவினரை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர். ஸ்பூட்னிக் தடுப்பூசியின் உள்நாட்டு உற்பத்தி குறித்து அமைச்சர்களுக்கு இந்த குழுவினர் விளக்கமளித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com