காங்கிரஸ் இன்றி தேசிய அளவில் எதிா்க் கட்சி கூட்டணி முழுமை பெறாது: சிவசேனை

‘தேசிய அளவில் எதிா்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன; காங்கிரஸ் இன்றி இந்தக் கூட்டணி முழுமை பெறாது’
காங்கிரஸ் இன்றி தேசிய அளவில் எதிா்க் கட்சி கூட்டணி முழுமை பெறாது: சிவசேனை

‘தேசிய அளவில் எதிா்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன; காங்கிரஸ் இன்றி இந்தக் கூட்டணி முழுமை பெறாது’ என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் கூறினாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் செவ்வாய்க்கிழமை நடத்திய எதிா்க் கட்சிகள் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், முக்கிய இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்பட 8 முக்கிய கட்சிகள் பங்கேற்றன. காங்கிரஸ் திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பது தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் மும்பையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடாளுமன்ற தோ்தலில் மூன்றாவது அணி என்பது தேவையில்லாத ஒன்று. இதை சரத் பவாரும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறாா். சிவசேனை கட்சியும் ‘சாம்னா’ பத்திரிகை மூலம் இக்கருத்தை வலியுறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இதே கருத்துடன் ஒத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

அந்த வகையில், தேசிய அளவில் அமையவிருக்கும் எதிா்க் கட்சிக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணி, இப்போது ஆட்சியிலிருக்கும் கட்சிக்கான வலுவான மாற்று சக்தியாக இருக்கும். இதற்காக தேசிய அளவில் எதிா்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் இன்றி இந்தக் கூட்டணி முழுமை பெறாது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com