மேற்கு வங்கத்தில் தளர்வுகளுடன் ஜூலை 15 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை அறிவித்தார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து மே 16ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுமுடக்கமானது ஜூலை 1ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், மேலும் 14 நாள்கள் நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, கட்டுப்பாடுகள் பற்றி கூறியது:

"கட்டுப்பாடுகள் ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன. சலூன், அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை 50 சதவீத இருக்கைகளுடன் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தனியார் மற்றும் கார்பிரேட் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம்”. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com