பஞ்சாபில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: கேஜரிவால் வாக்குறுதி

​பஞ்சாப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வென்று ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வாக்குறுதி அளித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பஞ்சாப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வென்று ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தில்லி முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வாக்குறுதி அளித்தார்.

இதுகுறித்து கேஜரிவால் சண்டீகரில் கூறியது:

"பஞ்சாபில் நாங்கள் மூன்று முக்கியப் பணிகளை மேற்கொள்வோம். முதலில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இரண்டாவது, இன்னும் கட்டாமல் நிலுவையில் உள்ள வீடுகளுக்கான மின் கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்புகள் வழங்கப்படும். மூன்றாவது, 24 மணி நேர மின் விநியோகம் வழங்கப்படும்.

தில்லியில் 2013-இல் நாங்கள் முதன்முதலாக தேர்தலை எதிர்கொண்டபோது, மின் கட்டணங்கள் அபத்தமாக இருந்தன. பஞ்சாபைப் போல தில்லி அரசும் மின்சார நிறுவனங்களுடன் கைகோர்த்திருந்தன. இன்று தில்லியில் குறைந்த விலையில் 24 மணி நேர மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இதை பஞ்சாபிலும் செய்ய வேண்டும்."

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளன. பஞ்சாப் தேர்தலுக்கான பணிகளில் கேஜரிவால் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பஞ்சாபில் வேலையில்லாதவர்களுக்கு இரண்டு மாதங்களில் புதிய கொள்கையை அறிவிக்கப்போதவாக கேஜரிவால் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com